• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சென்னை வங்கக்கடல் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது!..

By

Aug 24, 2021

சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வங்கக்கடலுக்கு அருகே 320 கிலோ மீட்டர் தொலைவில் பகல் 12.35 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்வுகள் கடற்கரை ஒட்டிய போரூர் , அண்ணாசாலை , திநகர், மயிலாப்பூர், அடையாறு , கிண்டி, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வு காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.