• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தளபதி 67 – இப்டியொரு அப்டேட்டா?

நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் தளபதி 67 பற்றிய அறிவிப்புகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போவதாக தகவல் வெளியானது. பீஸ்ட் பட ரிலீஸ், லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கும் கமலின் விக்ரம் படம் ஆகியவை ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

லேட்டஸ்ட் தகவலாக தளபதி 67 படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தயார் செய்து விட்டாராம். இந்த படத்தில் பாடல்களோ, ஹீரோயினோ கிடையாதாம். இது முழுக்க முழுக்க ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படத்திலும் பாடல்களோ, ஹீரோயினோ கிடையாது. இருந்தாலும் அந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. விரைவில் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், கைதி ஸ்டைலில் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க தயாராகி வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.