• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கைதி-2ல்ல விஜய்? – லோகேஷின் திட்டம்

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை தில் ராஜு தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்க உள்ளார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இப்படத்தையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67வது திரைப்படத்தை துவக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படம் போல இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு இடையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் லொகேஷன் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். கமல்ஹாசனின் விக்ரம் பட ஷூட்டிங் முடிந்த பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒருவேளை விஜய்யை கைதி இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்கபோகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.