• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சூடான வாழை இலையில் கட்டுச்சோறு!

முன்னல்லாம், டூர் (சுற்றுலா) அப்படினாலே, மாதம் ஒரு முறை, இல்லன்னா வருடம் ஒரு முறை அப்படிங்குற பழக்கம் தான் இருந்தது.. ஆனா, இப்போ எப்படா இந்த வார இறுதி அப்டின்னு காத்திருந்து டூர் போகிற பழக்கம் வந்திடுச்சு..

அப்படியான டூர்ல்ல, முக்கிய பங்கு வகிக்கிற பல பரிமாணங்கள் உண்டு.. அதுல மிக முக்கியமானது உணவு.. இந்த உணவ ரசிக்குறதுல இரண்டு வகை உண்டு.. ஒன்னு எந்த ஊருக்கு போறோமோ அந்த ஊர் உணவுகள அலைஞ்சு திரிஞ்சு தேடி போய், சுவைச்சு பாக்குறது, இது முதல் வகை..

மற்றொரு வகை, வீட்டுலயே வாய்க்கு ருசியா சமைச்சு, அத போன இடத்துல அருவிக்கு பக்கத்திலயோ இல்ல மலை பிரேதசங்களோட அழக ரசிச்சிட்டே சாப்பிடற்து..

இந்த இரண்டாம் வகைக்கான குறிப்பு தான் இது.. பொதுவா கட்டுச்சோறு கட்டும்போது பிளாஸ்டிக் டப்பாக்கலயோ இல்ல இதர பாத்திரங்களயோ தான், அதிகமா பயன்படுத்துறாங்க.. இது உணவோட ருசிய குறைக்குறது மட்டும் இல்லாம உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடியது.. முக்கியமா பிளாஸ்டிக்.. உடலுக்கு மட்டும் இல்ல.. குப்பையா போற மண்ணுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது..

இதற்கான மாற்றுதான் வாழை இலை.. அதான் வாழை இலை கட்டுச்சோறு.. இத சரியான முறைல்ல எப்டி கட்டு சோறு கட்டுறது..

வாழை இலைய நல்ல சுத்தமா கழுவி, அத உணவுக்கு தேவையான அளவுக்கு வெட்டி வச்சுக்கனும்.. பிறகு, அதுமேல கொஞ்சமா நல்லெண்ணெய தடவி, லேசா தீயில்ல வாட்டி அந்த சூட்டிலயே, நம்ம செய்யுற உணவ வச்சு இறுக்கமா கட்டணும். போன இடத்தில, உணவ பிரிச்சு சாப்பிடும் போது நல்லெண்ண வாசத்தோட, அந்த உணவோட ருசியே தனியா இருக்கும்..

சாப்பிட்ட பிறகு, அத கீழ எறியுறது மூலமா, பூமிக்கு உரமாவோ இல்ல கால்நடைகளுக்கு உணவாகுமே தவிர, தீங்கு விளைவிக்காது..

பின் குறிப்பு:
இப்படி வாழை இலை கட்டு சோறு முறையில், ஒரு ஐடியா.. ஒரு பாத்திரத்தில நெய்ய லேசா சூடாக்கி அதுல இட்லி மிளகாய்ப் பொடிய சேர்த்து, லேசா கிளறி அதுல சூடான இட்லிய போட்டு ஒரு குலுக்கு குலுக்கி, வாழை இலைல்ல மடிச்சு, அத டூர் போன இடத்தில பிரிச்சு சாப்பிட்டா, நாலஞ்சு இட்லி சத்தம் இல்லாம உள்ள போகும்..

இது போலவே, புலி சாதம், கத்திரிக்காய் தொக்கு, லெமன் சாதம் இல்ல சாம்பார் சாதம், உருளை கிழங்கு வறுவல் .. இப்டி காம்பினேஷன் உணவுகளும் கொண்டு போலாம்.. டூர் ஞாபகங்கள் வரிசைல்ல உணவு சரி இல்லனா பெரிய குறையாக தெரியும்.. மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற இந்த கட்டு சோறு முறைய பின்பற்றலாமே.