• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கதறி அழுத சாய் பல்லவி; ஆறுதல் சொன்ன நானி..

தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பட விழா ஒன்றில் மேடையில் கதறியழுத சாய்பல்லவி-யை நானி கட்டி அணைத்து ஆறுதல் கூடியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது

எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் இப்பொழுது சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக கலக்கி கொண்டுள்ளவர் . தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மிகவும் சரளமாக பேசக்கூடிய சாய்பல்லவி முதல் முதலில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

ஷ்யாம் சிங்கா ராய் படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஷ்யாம் சிங்கா ராய் பட விழா ஒன்றில் சாய்பல்லவி, ‘இன்று பலர் இண்டஸ்ட்ரியில் டான்ஸராகவும், நடிகையாகவும்,பாடகியாகவும் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கு இதுபோன்ற வாய்ப்பை வழங்கியதற்கு நல்ல கதாபாத்திரங்களை எனக்கு கொடுத்த இயக்குனர்களுக்கும் நன்றி.

எல்லோரும் சொல்கிறார்கள் நான் நன்றாக நடிக்கிறேன், நிறைய ஹார்ட் வொர்க் செய்கிறேன் என்று ஆனால் எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் என்ஜாய் செய்து செய்கிறேன். இவை அனைத்தும் நீங்கள் கொடுத்த அதரவால் மட்டுமே. நீங்கள் பார்த்த முதல் படத்திலேயே எதற்கு இந்த பொண்ணு என நினைத்திருந்தால் இந்நேரம் நான் காணாமல் போயிருப்பேன். எனவே எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் என்னை நம்பி நல்ல பாத்திரங்களை கொடுக்கும் படைப்பாளிகளுக்கும் நன்றி’. என ஷ்யாம் சிங்கா ராய் பட விழாவில் சாய் பல்லவி ரொம்பவே ஏமோஷனல் ஆகி மேடையில் கதறி அழுது பேசியதை பார்த்து நானி கட்டியணைத்து ஆறுதல் சொன்ன வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.