• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இணையத்தில் கசிந்ததா பீஸ்ட் புகைப்படங்கள்!

பீஸ்ட் படத்திலிருந்து புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கும் நடைபெறும்போது விஜய் திரும்பி நின்றவாறு ஒரு புகைப்படம் முன்னதாக வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து விஜய் ஷாப்பிங் மாலில் ரத்தக் கரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.

இதனை, தொடர்ந்து நேற்று தளபதி விஜய் செல்போனில் பேசிக் கொள்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது இதனால் பீஸ்ட் திரைப்படத்தின் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.