• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உறுதி என நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு !…

By

Aug 21, 2021

பப்ஜி மதன் தன்னை குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்க அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்த நிலையில் கடந்த 6ம் தேதி பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட விசாரணைக்கு வந்தது. இதில் கழக நீதிபதிகள் ரகுபதி, ராமன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ள நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” எனும் விளையாட்டை இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் மதன் என்பவர் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியும் விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் தாக்கல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தெரிவித்துள்ளது.