• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ நேர்முகத்தேர்வுக்கு 116 காலிப்பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கு 5,413 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மேற்காணும் தேர்வுக்கு மார்ச் 4-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன் பெறலாம்.