• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிபிஎஸ்இ செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் அமர்வு செய்முறை தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது! அதன்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ செய்முறை தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும்.

முந்தைய அறிவிப்பின்படி, தியரி தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி ஆஃப்லைனில் தொடங்கும். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு 2 ஆம் அமர்வுத் தேர்வுகளுக்கான தேதித்தாள் cbse.nic.in என்ற வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் பிராக்டிகல் தேர்வை மார்ச் 2, 2022 முதல் தொடங்கி, அந்தந்த வகுப்புத் தேர்வுகள் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு நடத்தி முடிக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கு வெளிப்புற தேர்வாளர்கள் வாரியத்தால் நியமிக்கப்படுவார்கள். எனினும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பள்ளிகளால் கண்காணிக்கப்படும். பிராக்டிகல் / உள் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் மார்ச் 2 முதல் அந்தந்த வகுப்பின் கடைசி தேதி வரை பதிவேற்றப்படும்.

கோவிட் வழிகாட்டுதல்களின்படி இந்தத் தேர்வுகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “கூட்டம் மற்றும் சமூக இடைவெளியைத் தவிர்க்க, பள்ளிகள் குழு/தொகுதி மாணவர்களை தலா 10 மாணவர்களைக் கொண்ட துணைக் குழுக்களாகப் பிரிக்ககூடும். 10 மாணவர்களைக் கொண்ட முதல் குழு ஆய்வகப் பணிகளில் கலந்து கொள்ளலாம், மற்றவர்கள் அதற்கான எழுத்துப்பணிகளில் ஈடுபடலாம், பின்னர் இந்த பணிகள் மாற்றப்படும்.” என வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.