• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வலிமை முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் 20.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், வெளிநாடுகளில் 20.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் மொத்தம் 96 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்வார் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!