• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடுவுல யார் வந்தாலும் அழிவு நிச்சயம்- மிரட்டும் புடின்..!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீழ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸ்கை ரஷ்ய படை தாக்கி வருகிறது. ஒடேசாம் கார்கிங், மைக்கோ, மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருவதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் போருக்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அளவில் அழிவை சந்திப்பார்கள் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.