• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அழகிரியின் ஆதரவாளர் வெற்றி: அழகிரி ஏன் போட்டியிடவில்லை?

திமுக எதிர்க்கட்சியாக இருந்த வரையிலும் அக்கட்சிக்கு எதிராக பேசி வந்தார் மு. க. அழகிரி. திமுகவை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் தனிக்கட்சி எதுவும் தொடங்காமல் அதே நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
அத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அழகிரி திமுகவில் இணைய விரும்புவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் திமுக வெற்றி பெற்று 9 மாதங்களாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட மு. க. அழகிரியும், ஸ்டாலினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவேயில்லை .

இந்த நிலையில் மு.க. அழகிரி ஆதரவாளர் மதுரையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். மதுரை மாநகராட்சி தேர்தலில் அழகிரியின் ஆதரவாளர்களான முபாரக் மந்திரியின் மனைவி பானுவும், இசக்கிமுத்துவின் மனைவியும் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
மதுரை 47வது வார்டில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து அழகிரி ஆதரவாளர்பானு போட்டியிட்டது கவனம் பெற்றிருந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரி மனைவி பானு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பாஜக வேட்பாளரை விட 2, 270 வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறார்.
அழகிரியின் ஆதரவாளர் வெற்றி திமுகவினரை அதிர வைத்திருக்கிறது. மு.க. அழகிரி ஆதரவாளர்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி அழகிரி போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார். அவர் ஏன் போட்டியிடவில்லை என்று அரசியல் வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.
மேலும் திமுக தரப்பில் இருந்து ஒரு ஆபர் முக அழகிரிக்கு வழங்க இருப்பதாகவும்தேர்தலுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.இந்நிலையில் தனக்கு அது போல எந்த பதவியும் வேண்டாம் என்று அழகிரி கூறியதாகவும், அழகிரி மகனான துரை தயாநிதிக்கு பொறுப்பு வழங்கலாமா என்றும் குடும்பத்தினர் யோசித்து வருகின்றனராம். அதனால் தான் அரசியல் குறித்து முக அழகிரி வாய் திறக்காமல் இருக்கிறாராம்.