• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலை; தொடரும் பதற்றம்

கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ஷிவமொகா நகரில் நேற்றிரவு (பிப்.,20) பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகியான ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கல்வீச்சு சம்பவமும் நடந்தது. ஷிவமொகா நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஹர்ஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பல்வேறு ஹிந்து அமைப்பினர் வழிநெடுக ஊர்வலமாக ஹர்ஷாவின் உடலை எடுத்து சென்றனர். பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வால் அங்கு பதற்றம் நிலவியது.