• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கரு.பழனியப்பன் நடிக்கும் படத்தலைப்பு குறித்து சர்ச்சை!

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ள கள்ளன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரிதாக சில பெண் இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இப்போது இயக்குனர் அமீரின் உதவியாளரும், எழுத்தாளருமான சந்திரா தங்கராஜ் கள்ளன் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பல ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த படத்தின் தலைப்பு குறித்து ஆட்சேபம் தெரிவித்து படத்தின் இயக்குனர், கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் இயக்குனர் சந்திரா தங்கராஜ் தலைப்பை மாற்றப்போவதில்லை என்றும் படம் எந்த சமூகத்தினரையும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த போது வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனாள் கள்ளன் திரைப்படம் அதே தலைப்புடன் திரைக்கு வருவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.