• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு.. – கமல்!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறப்போவதாக அவரே அறிவித்துள்ளார். ஹவுஸ்மேட்ஸ்களை எவிக்ஷன் செய்யும் நடிகர் கமல், இந்த வாரம் அவர் வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

தனது அறிவிப்பில் கமல், ‘பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு மனதிற்கு பிடித்த நிகழ்ச்சி என்ற போதும், விக்ரம் திரைப்படம் உள்ளிட்ட திரைத்துறை பணிகள் காத்திருக்கிறது. மேலும், விக்ரம் திரைப்படத்தில் பணிபுரியும் சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் என்னால் சிரமப்படுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு மிகவும் மனவருத்தத்துடன் இந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும், ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், இதனால் அவர் விக்ரம் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.