• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வெல்லம் உருகிடிச்சுனு சொன்னீங்களே… இங்க ஒரு ரோடே உருகியிருக்கு…

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் வெல்லம் உருகியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது சுமத்தி வருகிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதற்குப் பதிலடியாக பொள்ளாட்சி, தூத்துக்குடி, கொடநாடு என அதிமுக ஆட்சியின் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளையும், பினாயில் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல்களையும் பட்டியலிட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் மாவட்ட வாரியாக காணொலி மூலம் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் அந்தந்த மாவட்டங்களுக்கு திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களையும்,. முந்தைய அதிமுக ஆட்சியில் அந்த மாவட்டம் எப்படி புறக்கணிக்கப்பட்டது என்பதையும் புள்ளிவிவரத்துடன் அடுக்கியும் வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் திமுக தொண்டர்கள் சமூகதளத்தில் அதிமுக மீதான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். அந்த வகையில் கோவையில் கட்டப்பட்ட உயர்மட்டப்பாலத்தில் இணைப்புச்சாலையில் விழுந்துள்ள பெரிய பள்ளத்தைச் சுட்டிக்காட்டி “வெல்லம் உருகிடிச்சுனு சொன்னவனுங்களா.. இங்க ஒரு ரோடே உருகியிருக்கு” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.