• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

படத்துக்கு அவுட்லைன் குடுத்தது ரஜினியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது..  ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை குறுகிய காலத்தில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன உடனேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதை பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்துக்காக ரஜினி சொன்ன ஒரு அவுட்லைனைதான் நெல்சன் திரைக்கதையாக மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில படங்களின் கதை விவாதங்களில் ரஜினி இதுபோல ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.