• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 950 உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது! இந்த தகவல் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான @opportunities.rbi.org.in -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Assistant Recruitment 2022: ரிசர்வ் வங்கியில் 950 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் (Application) இன்று முதல் (17-02-2022) வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான கடைசி நாள் 08 மார்ச் 2022. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு மார்ச் 26 அல்லது 27-ம் தேதி முதல்நிலை தேர்வாக நடைபெறும். இதில் தகுதி பெறுவோர் அடுத்தகட்டமாக பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

தகுதிகள்:

குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கணினியை இயக்கும் திறன். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் அந்த மாநிலத்தின் மொழியை எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு 20. அதிகபட்ச வயது வரம்பு 28.

தேர்வு செய்யப்படும் விதம்

  1. முதல் மற்றும் 2ம் கட்ட தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்.
  2. மொழித்தேர்வு

முதல்கட்ட தேர்வு பாடத்திட்ட விபரம்

3 பிரிவுகளில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில பாடத்தில் 30 கேள்விகளும், கணிதத்தில் 35 கேள்விகளும், புரிந்துணர்தல் திறன் பிரிவில் 35 கேள்விகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு 1 மணிநேரம் மட்டுமே தேர்வு நடைபெறும்.

2ம் கட்ட தேர்வு பாடத்திட்ட விபரம்
புரிந்துணர்தல் திறன், ஆங்கிலம், எண் பயன்பாடு திறன், பொது அறிவு, கணினி அறிவு ஆகிய 5 பாடங்களில் தலா 40 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்வி ஒவ்வொன்றுக்கும் 1 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கான கால அளவு 135 நிமிடங்கள்.

மொழித்தேர்வு
மொழித்தேர்வில் தேர்ச்சி அடையாதோருக்கு பணியிடம் வழங்கப்பட மாட்டாது. அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் தேர்வு நடத்தப்படும். பின்வரும் மாநிலங்களில் பணிபுரிய விண்ணப்பிப்போர் தேர்ச்சி பெற வேண்டிய மொழித்தாள் விபரம்.

அகமதாபாத் – குஜராத்தி
பெங்களூரு – கன்னடம்
போபால் – இந்தி
புவனேஸ்வர் – ஒரியா
சண்டிகர் – பஞ்சாபி / இந்தி
சென்னை – தமிழ்
கவுகாத்தி – அசாமி / பெங்காலி / காசி / மணிப்பூரி / போடோ / மிசோ
ஹைதராபாத் – தெலுங்கு
ஜெய்ப்பூர் – இந்தி
ஜம்மு – உருது / இந்தி / காஷ்மீரி
கான்பூர் & லக்னோ – இந்தி
கொல்கத்தா – பெங்காலி / நேபாளி
மும்பை – மராத்தி / கொங்கனி
நாக்பூர் – மராத்தி / இந்தி
டெல்லி- இந்தி
பாட்னா – இந்தி / மைதிலி
திருவனந்தபுரம் – மலையாளம்