• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிம்பு பட நடிகர் மாரடைப்பால் மரணம்!

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் நடித்தவர் கோட்டயம் பிரதீப். அந்த படத்தில் திரிஷாவின் மலையாள உறவினராக நடித்த அவர் சிம்பு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரோடு உரையாடும் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனை தொடர்ந்து நண்பேன்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். 60 வயதாகும் பிரதீப்பின் இறப்பு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.