• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அதிரவைக்கும் செல்வராகவனின் பீஸ்ட் லுக்!

இயக்குநர் செல்வராகவன் ஜிம் பாடி உடன் கொடுத்துள்ள மிரட்டல் போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநராக தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்து வந்த செல்வராகவன் நடிகராக பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் அசத்த உள்ளார்.

தம்பி தனுஷை ஹீரோவாக்கி தான் இயக்கிய முதல் படமான காதல் கொண்டேன் படத்தின் மூலமே ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஈர்த்தவர் இயக்குநர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவனை தமிழ் சினிமா ரசிகர்கள் ஜீனியஸ் செல்வராகவன் என பாராட்டி வருகின்றனர்.