• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வர்நாத் பண்டாரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முனீஸ்வர்நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க முன்னதாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.இதனையடுத்து, அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,இன்று (பிப்.14-ஆம் தேதி) முனீஸ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.அதன்படி,கிண்டி ஆளுநர் மாளிகையில், இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி,முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில்,முதல்வர் ஸ்டாலின்,உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்சிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.