

10 மற்றும் 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சகிந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த நிலையில் விசாரணை தொடங்கியது. நேற்று வெளியான அதே வினாத்தாள் தான் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு அறிவியல், 12-ம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் நேற்று வெளியாகின. வினாத்தாள் வெளியானது குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, 10 மற்றும் 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சகிந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை தொடங்கியது. திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேர்வுதுறை இணை இயக்குனர் பொன் குமார் விசாரணையை தொடங்கினார்.
