• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஷங்கரிடம் மன்னிப்புக்கேட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்.!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தற்போது, மகேஷ் பாபு நடித்து முடித்துள்ள திரைப்படம் “சர்கார் வாரி பாட்டா” வருகின்ற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபு கலந்துகொண்டார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு பிரபல தமிழ் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவத்தை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து மகேஷ் பாபு கூறுகையில், “நான் குடும்பத்துடன் ஒரு முறை மும்பைக்கு சென்று ஓட்டலில் அமர்ந்திருந்தேன். அப்போது இரண்டு பெண்கள் வந்து என்னுடன் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினர். அப்போது, நான் குடும்பத்துடன் வந்திருப்பதால் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தேன். அவர்களும் விலகி சென்றார்கள்.

அப்போது என் பக்கத்தில் இருந்தவர், அது இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்று கூறினார். அப்போது, உடனே நான் அவர்களை தேடிச் சென்றேன். கீழே வரவேற்பு பகுதியில் இயக்குனர் ஷங்கருடன் இருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து ஷங்கரிடம், மன்னித்து விடுங்கள் என்று கூறினேன்.

இவர்கள், உங்கள் மகள்கள் என்று தெரியாமல் செல்பீ எடுப்பதற்கு மறுத்துவிட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவர், ‘பரவாயில்லை’ நடிர்கள் அவர்களது குடும்பத்துடன் இருக்கும்போது குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுப்பார்கள் என்பதை இவர்களும் தெரிந்துகொள்ள வேண்டாமா’ என்றார். அதன் பின் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்றார்.