• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கெத்து காட்டும் கிங்ஸ்லி… எச்சரித்த வைகைப்புயல்!

டாக்டர் படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் கிங்ஸ்லி. தொடர்ந்து அண்ணாத்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் இவரது நடவடிக்கைகள் பந்தா காட்டும் வகையில் இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது!

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்ற அவருக்கு கொரோனா பாதித்திருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்துவரும் வடிவேலு, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடி கேரக்டர்களிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென கதைகளை கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அவருடன் இணைந்து பல காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி அதிகமான காட்சிகளில் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்துள்ள காட்சிகளுக்காக படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த சூட்டிங்கில் பங்கேற்க நடிகர் வடிவேலு முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரெடின் கிங்ஸ்லி பல மணிநேரம் தாமதமாக படப்பிடிப்புகு வந்துள்ளார்.

அவர் வரும்வரை வடிவேலு பொறுமையாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, வடிவேலு, கிங்ஸ்லியை எச்சரித்ததாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது! அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால் ரெடின் கிங்ஸ்லியின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருப்பதாகவும் அதிகமான பந்தா காட்டி வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.