இந்தி திரைப்பட உலகில்பிரம்மாண்ட படங்களை தயாரித்துமிகப் பெரிய நிறுவனமாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கும் Viacom18 studios, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் முதல்திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட்நிறுவனம்
இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது.அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘ஆகாஷம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த ‘நித்தம் ஒரு வானம்’ படம் நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை என்கிறார் இயக்குனர் கார்த்திக்இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நேற்று வெளியிட்டார்.
நித்தம் ஒரு வானம் முதல் பார்வை வெளியீடு
