• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற பிப்.10 ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கிலம் திருப்புதல் தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் நாளை முதல் பிப்.16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில்,பிப்.10 ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெற இருந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும்,அத்தேர்வு பிப்.17 ஆம் தேதியன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத் தேதி மாற்றம் குறித்த தகவலை,முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.