தேவையானவை:
சேப்பங்கிழங்கு – அரைகிலோ, நாட்டுத் தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, புளிக்கரைசல் – சிறிதளவு, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, நசுக்கிய பூண்டு – 4.
செய்முறை:
சேப்பங் கிழங்கை வேகவிட்டு, தோல் உரித்து, மசிக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதில் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து, கொதி வருகையில் மசித்த சேப்பங்கிழங்கு, அரை கப் நீர் சேர்த்து… நன்கு கொதித்து வரும்போது இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.