• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்ல் நடிக்கத் தொடங்கிய விமல்!

கடந்த பல ஆண்டுகளாகவே விமல் நடித்த எந்தப் படமும் வெற்றியடையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சல, காவல், மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2, கன்னி ராசி படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு திரும்பிவந்தது.

சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, குலசாமி, லக்கி, மஞ்சள் குடை படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்த நிலையில் வெப் சீரிசுக்கு வந்திருக்கிறார் விமல்.

அவர் நடிக்கும் விலங்கு என்ற வெப் சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கிறார்.

விமலுடன் பால சரவணன், முனீஷ்காந்த், இனியா உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 18ம் தேதி முதல் G5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.