• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 4, 2022

சிந்தனைத் துளிகள்

• எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும்.

• எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.

• நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம்.

• மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்.

• வாழ்க்கையில் ஒரு துன்பத்தை விட்டு வேறொரு துன்பத்தை அடையும்போது ஏற்படும் மாறுதல் ஒருவகை இன்பத்தை உண்டாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *