• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் இல்லம் முன்பு, பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் பள்ளியில் படித்த, அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற முயற்சி காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு பள்ளி நிர்வாகம், தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் இல்லம் முன்பு, பாஜகவின் மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் வைகை இல்லத்திற்கு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா காலக்கட்டத்தில் அனுமதியின்றி இதுப்போன்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட கூடாது என்று டெல்லி போலீசார் மாணவர் அமைப்பினரிடம் கேட்டு கொண்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.