• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசியல் கட்சியின் விளம்பரங்களை அகற்றி வருகிறது சென்னை மாநகராட்சி

Byகாயத்ரி

Jan 29, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது.

இதனையொட்டி சென்னை மாநகராட்சி அரசு பணி உழியர்கள் அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றம் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் இருக்கும் பேனர்களை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.

மொத்தம் 3193 விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.இதேபோல் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 1089 கட்சி விளம்பரங்களையும் அகற்றியுள்ளனர்.பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படமும் மறைக்கப்பட்டு வருகின்றனர்.பஸ் நிலையங்களில் இருக்கும் விளம்பரங்கள் எல்லாம் துரிதமாக அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்து வருகின்றது சென்னை மாநகராட்சி.