நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்;சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தி.மு.க மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமையை கேட்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட கூடாது என்று, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அவசர கடிதத்தை அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்..,
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டும். மாநில தலைமையின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாவட்டத்திலும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.