• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஏ.ஜி.எஸ்.ராம்பாபுவிற்கு இரங்கல் கூட்டம்!

Byகுமார்

Jan 27, 2022

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளருமாக இருந்த ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, கொரானா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று முறை மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்பாபு, மதுரையில் செளராஷ்டிரா சபை மூலம் சமூகப்பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏஜிஎஸ் ராம்பாபுவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் முன்னாள் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் S.S. சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதிமுகாவின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் s.s சரவணன் என ஏராளமானோர் கலந்து கொண்டு ராம்பாபு திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ராம்பாபுவின் அரசியல் சேவை மற்றும் பணிகள் குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.