மதுரை முதல் போடி வரையிலான அகல ராயில்பாதை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வேகமாக நடைபெற்று வரும் ரயில்பாதை இன்னும் இரண்டு மாதங்களில் போடி வரையிலான அகலரயில் பாதை திட்டம் நிறைவுபெறும் என்று கூறபடும் நிலையில் மதுரை முதல் உசிலம்பட்டி, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி மற்றும் ஆண்டிபட்டி முதல் தேனி வரையிலான சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது .
அதன் அடுத்தபகுதியாக மதுரை தேனி அகலரயில்பாதை ரயில் சோதனை ஓட்டம் 31ம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று ரயில் என்ஜின் மட்டும் மதுரை முதல் தேனி வரை 72 கிலோமீட்டர் தூரத்தை 120 கிலோமீட்டர் வேகத்தில் தேனியை வந்தடைந்தது. வரும் 31ஆம் தேதி சோதனை ஓட்டத்தை தென்னிந்திய பிராந்திய ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அபய்குமார் மேற்கொள்கிறார் .