• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஹிந்தியில் ரீமேக்காகவுள்ள தமிழ் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்!

ஒரு காலத்தில் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அதிக திரைப்படங்கள் தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இப்போது தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யும் டிரெண்ட் மாறியுள்ளது! அந்தவகையில், இந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜின் இரண்டு படங்கள் உள்ளிட்ட மொத்தம் தமிழ் 6 படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன.

யு டர்ன் (U Turn)

தமிழ் மற்றும் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யு டர்ன். சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமான இதில், சமந்தாவின் நடித்திருந்தார்! பாலகுமாரன் படத்தை இயக்கியிருந்தார்! இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஆல்யா எஃப் நடிக்கிறார். ஏக்தா கபூர் புரோடக்சன் படத்தை தயாரிக்கிறது.

சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை துவங்கிய கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விக்ரம் வேதா
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தை புஸ்கர் – காயத்திரி இயக்கியிருந்தனர். போலீஸ், வில்லன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் மாஸான நடிகர்கள் நடித்து, படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதேபெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.

அருவி
எய்ட்ஸ் நோயாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அருவி. லீட் ரோலில் அதிதி பாலன் நடித்தார். அருண் பிரபு புருஷோத்தம்மன் குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியில் ரீமேக்காகும் அருவி திரைப்படத்தை இயக்குநர் ஈ நிவாஸ் இயக்க உள்ளனர். ஃபாத்திமா சானா ஷாயிக் லீட் ரோலில் நடிக்கிறார்.

மாஸ்டர்
இளைய தளபதி விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார். வசூலில் சாதனை படைத்த இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சல்மான்கான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கும் ஹிந்தி மாஸ்டரை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

கைதி
நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளியான படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், செம ஹிட் கொடுத்தது. வியாபார ரீதியாகவும் நல்ல கலெக்ஷனைக் கொடுத்த இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார். ஹிந்தியில் BHOLAA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.