• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மூர்த்தியை அடுத்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கும் கொரோனா

Byகாயத்ரி

Jan 21, 2022

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தது.

ஆனால், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தற்போது வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதனிடையே, கொரோனா பாதிப்பால் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கருக்கும், இன்று காலை அமைச்சர் மூர்த்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல்வாதிகளை குறிவைத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர்.