• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிப்.,1 முதல் ஆன்லைனில் தேர்வுகள்!

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

கோவிட் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் நிருபர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில் நடக்கும்.

கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடக்காத வகையிலும் குளறுபடி இல்லாமலும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்!