• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Byகுமார்

Jan 20, 2022

வருகிற ஜனவரி 26ம் தேதி,  டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு செல்ல மத்திய பாதுகாப்புத் துறை நிபுணர் குழு அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் கலை இலக்கியக் குழு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய வவுசி.மகாகவி பாரதி, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடக்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பதை ஏமாற்றம் அளிக்கிறது என்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களின் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்யுமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் மேலும் இந்திய முதல் சுதந்திர போராட்ட தியாகி மாமன்னர் மருதுபாண்டியர் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.