• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

‘பிக்பாஸ்’ பாவனிக்கு கொரோனா!

தெலுங்கு திரையுலகில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். பின், பல்வேறு சீரியல்களில் நடித்த பாவனி ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கடைசி நாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். கடந்த வாரம் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பாவனி.

அதில், “லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்!