• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை! -கஸ்தூரிராஜா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டிருந்தார். அவர்களின் விவாகரத்து அறிவிப்பு அனைவர்  மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டை தான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இருவருமே தற்போது சென்னையில் இல்லை. ஹைதராபாத்தில் உள்ளனர். நான் இருவரையும் போனில் தொடர்பு கொண்டு சில அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.