• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

எதற்கும் துணிந்தவன் மூன்றாவது பாடல் வெளியீடு – தணிக்கை முடிந்தது

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இப்படம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது பாடலும் நேற்று வெளியாகி உள்ளது. சும்மா சுர்ருன்னு என்று தொடங்கும் அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார். அர்மான் மாலிக், நிகிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.