• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!…

By

Aug 10, 2021

மருதம்புத்தூரில் போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூரை சேர்ந்தவர் சாமிதாஸ். 50 வயதான இவர் கூலி தொழிலாளி. இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சாமிதாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வேலைக்கு போகாமல் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டுவெளியே சென்ற சாமிதாஸ் இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் சாமிதாஸ் சடலம் மிதப்பதை பார்த்து கிராம மக்கள் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து சாமிதாஸ் சடலத்தை மீட்டனர். இறந்தவர் சடலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.