• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் ஷிவானி பாலாஜி இயக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் ஷிவானி, பொன்ராம் இயக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது மூன்றாவதாக ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே .பாலாஜி எல்கேஜி படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை நயன்தாராவை வைத்து இயக்கி நடித்தார். இந்தநிலையில் விரைவில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தில் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். இதனை ஆர்.ஜே.பாலாஜியுடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஷிவானி.