• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைப்படி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரிலும் பெரிய நெகமம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கேவிகே சபரி கார்த்திகேயன் மற்றும் வர்த்தக அணி அமைப்பாளர் இலட்சுமி நாச்சிமுத்து முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. உடன் பேரூர் கழக செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சபரி ஆகியோர் உடனிருந்தனர். பெரிய நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் தங்கம் மாரியம்மாள் காஞ்சனமாலா அம்சவேணி மற்றும் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின்படி பள்ளி முடிந்து மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மையங்களுக்கு அனுப்ப வேண்டும்; 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும்.