• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல். நிறுவனம், மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.


இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ ஆகியவை அனைத்து சலுகை கட்டணங்களையும் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை உயர்த்தின. இதனால், ஏராளமானோர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற துவங்கினர். இதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.


அதன்படி, ஏர்டெல், ஜியோ வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் போது 5 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு ஜனவரி 15ம் தேதிக்கு முன்பு மாற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.