• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஜோதிடர் சொன்னதை நம்பி மகளைக் கொன்று தற்கொலை செய்த தாய்?

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி . இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

தனலட்சுமியின் மகன் சசிக்குமார் திருமணமாகி அவர் குடும்பத்துடன் சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு தனலட்சுமி மகன் சசிக்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, “நான் ஒரு ஜோதிடரை அணுகினேன். அவர் எனக்கு உடல்நலம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருங்கள்.” என்று கூறினார். “அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் உன்னால், என்னையும் சகோதரியையும் பார்த்துக் கொள்வது கடினம்.” என்று மகனிடம் வருத்தப்பட்டுள்ளார். சசிக்குமார், “அப்படி எதுவும் ஆகாது. ஒருவேளை ஏதாவது நிகழ்ந்தால் கூட உங்களை நான் பார்த்துக் கொள்வேன்,” என்று ஆறுதல் அளித்திருக்கிறார்.


ஆனால் தனலட்சுமி சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து சசிக்குமார் செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டபோது தனலட்சுமி எடுக்கவில்லை. இதையடுத்து, அருகில் உள்ளவர்களிடம் சொல்லி பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. உடனடியாக மகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.


தனலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன்பு, மகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.