• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம் ஹன்சிகா மோத்வானி உபதேசம்

ஹன்சிகா மோத்வானி தமிழ் படத்தில் நடித்து முழுதாக இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 2019ல் அவர் நடித்த 100 படம்தான் கடைசியாக அவர் நடித்தது. அவர் நடித்து முடித்துள்ள மகா படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் 2022 முதல் மீண்டும் அதிக படங்களில் நடிப்பதாக கூறியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ், ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணையும் ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும் வாலு புகழ் இயக்குனர் விஜய் சந்தருடன் இணையும் ஒரு படமும் அடங்கும், இது தவிர இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படமும் மேலும் சில படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறியுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது


கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் மிகவும் துன்பத்திற்குள்ளானது.

ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்த அனைவரின் அன்பிற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்களின் அன்புதான் இந்த உலகத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது, இந்த கடின காலத்தில் அன்பை அள்ளித்தரும் அவர்களை ஏராளமாகக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


தயாரிப்பு நிலையின் வெவ்வெறு கட்டத்தில் உள்ள எனது 9 வெவ்வேறு திரைப்படங்களை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை. என குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி.