• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மோகன்லால் மொட்டைதலையுடன் நடிக்கும் 3D படம்

பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா’ஸ் ட்ரெஷர்’ என்கிற படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மாறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் 3டியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் முதல் பார்வை விளம்பரபோஸ்டரை பார்த்த மோகன்லால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமா உலகத்திற்கு ஆச்சர்யமாகவும் மலையாள மக்களுக்கு சர்ப்ரைஸ் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும்.

இந்தப்படத்தில் முதன்முறையாக மொட்டைத்தலையுடன் நடிக்கிறார் மோகன்லால்.போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற காவலன் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடிக்கிறார். அதற்காகத்தான் மொட்டைத்தலையும் நீண்ட தாடியுமாக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார் மோகன்லால். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.