ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் நடத்தினார்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி மற்றும் புளியங்குடி நகராட்சி, வாசு ஒன்றியம் சிவகிரி மற்றும் ராயகிரி பேராட்சி கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை நேர்காணல் நடத்தினார் . புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு, சிவகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், வாசு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன், புதூர் பேரூர் செயலாளர் கோபால், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.