• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மதமாற்றம் செய்வதாக கூறி தலித் குடும்பத்தை வீடு புகுந்து தாக்கிய மதவெறி கும்பல்

கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்..


அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் என்னன்னு பாருங்க..!


நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க நேரிடுகிறது.


கர்நாடக மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.. மதமாற்ற விவகாரங்கள் இங்கும் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றன. கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை விரைவில் கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அதை சட்டமாக்க இருப்பதாக அறிவிப்பும் வெளியாகி விட்டது.. ஆனாலும், படுபயங்கரமான செயல் ஒன்று அங்கு நடந்துள்ளது.. கடந்த வாரம் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக சொல்லி, பெண்கள் உள்ளிட்ட மதபோதகரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர்… பெலாகவி மாவட்டத்தில் துக்கனட்டி என்ற கிராமம் உள்ளது..

இங்கு வசித்து வருபவர் அக்‌ஷய்குமார் கரகன்வி.. இவர் ஒரு மதபோதகர்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர்.. கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று இவர் வீட்டில் மதியம் 1 மணிக்கு பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தது.. பிரார்த்தனை முடிந்ததும் சாப்பிடுவதற்காக சாப்பாடும் கிச்சனில் தயாராகி கொண்டிருந்தது. அப்போது, வலதுசாரி ஆதரவாளர்கள் 7 பேர் அங்கு திடுதிப்பென்று அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.. பிரார்த்தனை கூட்டத்தை உடனே நிறுத்துமாறு சொல்லி உள்ளனர்.. அக்‌ஷய்குமார், அந்த கிராமத்தினரை கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதாக சொல்கிறாராம்… அந்த ஆத்திரத்தில்தான், அவரையும், குடும்பத்தினரையும் வலதுசாரி ஆதரவாளர்கள் அடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்… மேலும் வாய்க்கு வந்ததையெல்லாம் அக்‌ஷய்குமார் குடும்பத்தினரை பார்த்து திட்டிவிட்டு போனார்கள்.. ஆபாசமாக வசைபாடினார்கள்..

அப்போதும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. நேராக கிச்சனுக்கு போய் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, அக்‌ஷய்குமார் மனைவி பாரதி மீது கொதிக்க கொதிக்க ஊற்றினார்கள்.. இதனால் வலி பொறுக்க முடியாமல் பாரதி கதறி துடித்தார்.. அப்போதும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. அந்த சாம்பார் சட்டியை கொண்டு பாரதியின் காலில் வலுவாக தாக்கினார்கள்.. இதனால் பாரதிக்கு உடம்பு வெந்துபோய் தீக்காயம் ஏற்பட்டது.. இந்த தாக்குதல் 3 பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் மீது நடத்தப்பட்டுள்ளது.. அதற்கு பிறகுதான் அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறியது.. இந்த சம்பவம் குறித்து காதாபிரபா போலீஸில் புகார் தரப்பட்டது.. மொத்தம் 7 பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.